பணகுடி அருகே கார் மோதி தொழிலாளி பலி!
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சாலையில் நடந்து சென்ற காற்றாலை ஊழியர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த மாடநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (27). இவர் அதே பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில், ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை ராஜேஷ் கண்ணன் குமாரபுரம் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஷ் கண்ணனை, அப்பகுதி மக்கள் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பணகுடி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரான பணகுடியை சேர்ந்த சதீஸ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

