ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!
ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்னும் பெண் கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஆன சுவாதி தினம்தோறும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து பணிக்கு சென்று வந்த நிலையில் காலை 6 மணி அளவில் ரயிலுக்காக காத்திருந்த சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கு தொடர்பாக செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் எனும் சிற்றூரில் உள்ள ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் கொலைக்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனிடையே ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சிறை வளாகத்தில் இருந்த மின் கம்பியை கடித்து அவர் இறந்து விட்டதாக சிறை துறையினர் அறிவித்தனர்

இந்நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்த மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்திருந்தார் . கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் , புழல் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது . அத்துடன் ராம்குமார் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


