பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்!!

 
tn tn

12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

madras university


சென்னைப் பல்கலைக்கழகம்  1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பல சிறப்பான அறிவிப்புகள் அண்மை காலமாக வெளியாகி வருகிறது. 

school

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலை., முடிவெடுத்துள்ளது.தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு இலவசமாக இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.