• May
    26
    Sunday

Main Area

Mainமாந்தோப்பில் வைத்து 5 நாள் நாசம்.. கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி

girl
girl
Loading...

திருவள்ளூர்: 5 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு 5 நாட்களாக 15 வயது சரிதாவை மாந்தோப்பில் வைத்து சீரழித்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது புதுவெங்கடாபுரம் என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு கட்டட மேஸ்திரி. பால் வியாபாரமும் செய்து வந்தார். இவரது மகள் 15 வயதான சரிதா. புதுகீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

மெயின் ரோடு வழியாக பள்ளிக்குப் போனால் 3 கிலோ மீட்டராம். கரும்பு காட்டு வழியாக குறுக்கே புகுந்து போனால் அரை கிலோ மீட்டர் தூரம்தானாம். அதனால் இந்த வழியாகத்தான் சரிதா வழக்கமாக பள்ளிக்குச் செல்வார். அப்படி செல்லும்போது, புதுகீச்சலம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரது வீட்டிலும் பால் கொடுத்து விட்டு பள்ளிக்கு சென்று விடுவார்.


மனு தாக்கல்:


ஆனால் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காலை 7:30 மணியளவில் பால் பாத்திரத்துடன் சென்ற சரிதா அன்று மாலை பள்ளி முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடி எங்கேயும் சரிதா கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜனவரி மாதம், சரிதாவின் பெற்றோர், சென்னை ஹைகோர்ட்டில் இது சம்பந்தமாக மனு தாக்கல் செய்தார்கள்.


எலும்புக்கூடு:

rapemurder

சரிதா வழக்கு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டதையடுத்துதான் போலீசார் துரிதமானார்கள். இந்த சமயத்தில்தான் கடந்த 11-ம் தேதி கரும்பு தோட்டத்தில் ஒரு எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்று பார்த்தபோது, ஸ்கூல் யூனிபார்மில் அந்த எலும்பு கூடு காட்சியளித்தது. கூடவே அந்த எலும்புக்கூட்டில் கம்மல், செருப்பு, கொலுசு கிடந்தது.


தடயவியல் பரிசோதனை:

rapemurder


இதையடுத்து அது சரிதாவின் எலும்புக்கூடாக இருக்கக்கூடும் என சந்தேகப்பட்டனர். அதன்பிறகு அந்த எலும்புகூடுகளை தடயவியல் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையில் மிக தீவிரமானார்கள். அப்போதுதான் புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்த 20 வயது சங்கரய்யா என்பவர் சரிதா பின்னாடியே சுற்றி கொண்டிருந்தார் என்ற ஒரு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஒருதலைக்காதல்:

rapemurder


அப்போது அவர் வெளியிட்ட தகவல்களை கேட்டு போலீசாரே அதிர்ந்து விட்டனர். வேலை வெட்டி எதுவும் இல்லாத சங்கரய்யா சரிதாவை காதலித்துள்ளார். இதற்கு சரிதா மறுத்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக மாந்தோப்பில் உள்ள பாஸ்கர் வீட்டுக்கு பால் ஊற்ற சென்ற சரிதாவை, சங்கரய்யா வழியில் மடக்கி மிரட்டி உள்ளார். தொடர்ந்து பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். இதனை மாந்தோப்பு உரிமையாளர் நாதமுனியும், அவரது 50 வயது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் பார்த்துவிட்டனர்.

மாறி மாறி நாசம்:

rapemurder


சங்கரய்யாவை தனியாக கூப்பிட்டு, 5000 ரூபாய் தருகிறேன், அந்த பெண்ணை தன்னிடம் விட்டுவிட்டு செல்லும்படி சொல்லி இருக்கிறார். 5 ஆயிரத்தை பார்த்த சங்கரய்யாவும், அதற்கு ஒப்புக் கொண்டார். கொஞ்ச நேரத்தில் நாதமுனியும், கிருஷ்ணமூர்த்தியும் மயங்கிய நிலையில் கிடந்த சரிதாவை தோப்பில் இருந்த தங்கள் வீட்டுக்குத் தூக்கி சென்று மாறி மாறி நாசம் செய்திருக்கிறார்கள்.

3 அடி குழி:

rapemurder


கடைசியில் சரிதா மயங்கியே விழுந்துவிட்டாள். இப்படியே 5 நாட்களாக மாணவியை அந்த வீட்டுக்குள் அடைத்து வைத்து சீரழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பலத்த காயம் அடைந்த சிறுமி பலியாகிவிட்டாள். எனினும் இருவரும் சேர்ந்து அவள் கழுத்தை மீண்டும் ஒரு முறை நெரித்துள்ளனர். அதன்பிறகுதான் வெங்கடாபுரம் ஓடையில் 3 அடிக்கு குழி தோண்டி சரிதாவை போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.

5 பேர் கைது:

rapemurder


சரிதாவை புதைத்த இடத்தில் மண் அரிப்பு, மற்றும் சுற்றித்திரிந்த நாய்கள் மண்ணை தோண்டியதாலும் எலும்புக்கூடு வெளியே தெரியவந்துள்ளது. இப்போது சங்கரய்யா, நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

2018 TopTamilNews. All rights reserved.