• May
    21
    Tuesday

Main Area

Main



+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் அதிர்ச்சி தோல்வி: 19 மாணவர்கள் தற்கொலை!

மாணவர்கள் தற்கொலை
மாணவர்கள் தற்கொலை
Loading...

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் பொதுத் தேர்வு முடிவினால் இதுவரை 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

students

தெலங்கானாவில்  பிளஸ் 2 தேர்வை சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். கடந்த 18 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதிக மதிப்பெண் பெற்றிருந்தும்  3 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்திருந்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதையடுத்து, தேர்வு முடிவு வெளியான அடுத்த நாளே  10 மாணவ, மாணவிகள்  தற்கொலை செய்து கொண்டனர். 

protest

இதையடுத்து  தெலுங்கானாவில்  மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும்  போராட்டத்தில் குதித்தனர். இதை தொடர்ந்து கட்டணமின்றி விடைத்தாள் நகலைப் பெற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெலங்கானா அரசு அறிவித்தது. 

student

இதைத்  தொடர்ந்து மேலும் 9 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தேர்வு விவகாரத்தில் அரசு அலட்சிய போக்காகச் செயல்பட்டதாக  இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து மனு அளித்தனர்.அதில் கல்வித்துறை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் மறுகூட்டல் முறையை விரைவாகச்  செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: அரசின் அக்கறையின்மை; தெலங்கானாவில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை!

2018 TopTamilNews. All rights reserved.