• July
    18
    Thursday

Main Area

Main



வாயை பிளக்க வைக்கும் ‘2.0’ வசூல் நிலவரம்: உலகளவில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை!

2point0
2point0
Loading...

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் நவ.29-டிச.2 வார இறுதியில் ரூ.400 கோடி வசூலித்து ‘2.0’ திரைப்படம் முதல் இடத்தையும், அதைத் தொடர்ந்து ரூ.360 கோடி வசூலித்து ‘ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்’ திரைப்படம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘2.0’ திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் வெளியான ‘2.0’ திரைப்படம் ஒரே நாளில் ரூ.20.25 கோடி வசூலித்துள்ளததாகவும் கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.