• July
    20
    Saturday

Main Area

Main



அசுர வசூல் வேட்டையில் ‘2.0’: உலக பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூல் சாதனை

2point0
2point0
Loading...

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் கடந்த நவ.29ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ’2.0’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ‘2.0’ வெளியாகி 11 நாட்களில் ரூ.210 கோடி வசூலித்துள்ளது. இது மட்டுமல்லாது ஐக்கிய அமீரக நாடுகள், அமெரிக்க பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. உலகளவினால பாக்ஸ் ஆபீஸில் குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் பட்டியலில் ’2.0’ திரைப்படமும் இணைந்துள்ளது.

11 நாட்களில் ரூ.600 கோடி வசூலித்துள்ள ‘2.0’ திரைப்படம் இனி வரும் நாட்களில் இதுவரை ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த அமீர்கானின் ‘பிகே’, ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’, சல்மான் கானின் ‘பஜ்ராங்கி பாய்ஜான்’, ’பாகுபலி’ படங்களின் வரிசையில் விரைவில் ‘2.0’ திரைப்படம் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

2018 TopTamilNews. All rights reserved.