• May
    21
    Tuesday

Main Area

Main



போதையில் தகராறு செய்த மகன்: கொலை செய்து தற்கொலை நாடகமாடிய குடும்பம்!

கொலை
கொலை
Loading...

காஞ்சிபுரம்: குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம்  அய்யன்பேட்டை யை  சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு தமிழ் செல்வி  என்ற மனைவியும், மோகனவேல், மகேஷ், ரமேஷ் என 3 மகன்களும் உள்ளனர். இதில் மோகனவேல், ரமேஷ் அய்யன் பேட்டையில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால்  மகேஷ் மட்டும் சிங்கப்பூர் சென்று வேலைபார்த்து வந்துள்ளார். அவ்வப்போது இந்தியா வரும் மகேஷ் வரும் போதெல்லாம் குடித்து விட்டு தகராறு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

drinks

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாடு திரும்பிய மகேஷ், வழக்கம் போல் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷின் தந்தை மணி மற்றும் மோகனவேல்,  ரமேஷ் ஆகியோர் அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன மகேஷ்,  சம்பவ இடத்திலேயே இறந்து போயுள்ளார். 

murder

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கொலையைத் தற்கொலையாக மறைக்க, மகேஷின் 
உடலை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாலாஜாபாத் போலீசார், மகேஷின்  உடலைப் பார்த்து சோதனை செய்தனர். அப்போது மகேஷின் உடல் மற்றும் தலையில் ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்தனர்.

arrest

இதனால் அவர்கள் மகேஷ் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், மகேஷை கொலை செய்து தற்கொலை நாடகமாடியது  தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மகேஷின் தந்தை மற்றும் சகோதரர்களைக் கோழி செய்த குற்றத்திற்காகவும், அவரிடத்து தாய் தமிழ்செல்வியைக் கொலைக் குற்றத்தில் உடனிருந்த குற்றத்திற்காகவும் கைது செய்தனர். பின்னர் நன்கு பேரையும்  காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: நண்பரிடம் தூக்கு போட்டு கொள்ள போவதாக நடித்த இளைஞர்: வினையாக முடிந்த விளையாட்டு; அதிர்ச்சி தரும் சம்பவம்! 

2018 TopTamilNews. All rights reserved.