கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ’62 சதவீதம் பேர்’ சர்க்கரை நோயாளிகள்!

 

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ’62 சதவீதம் பேர்’ சர்க்கரை நோயாளிகள்!

நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான மருந்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் இந்த நோயை குணப்படுத்தலாம். இல்லையெனில், மரணம் விளைவிக்கும் அளவுக்கு இந்த நோய் அபாயகரமானதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அறிகுறிகள் தென்பட்டவுடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ’62 சதவீதம் பேர்’ சர்க்கரை நோயாளிகள்!

இந்த நோய் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்களையே தாக்குவதாக அண்மையில் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் இதுவரை 28,252 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்.

அதிகபட்சமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 6,339 பேர், குஜராத் மாநிலத்தில் 5,466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 86% பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 62% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.