• July
    22
    Monday

Main Area

Main



‘99’ ஆக மாறிய ராம்-ஜானு: சகட்டு மேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

99 கன்னட ரீமேக்
99 கன்னட ரீமேக்
Loading...

சென்னை: விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான  ‘99’ படத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

96

பிரேம் குமார் இயக்கத்தில்  வெளியான '96' திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. பள்ளிப்பருவத்தில் அரும்பிய காதலையும், 22 ஆண்டு கழித்து அதன் நினைவுகளையும் உணரும் காதல் கதையாக '96' திரைப்படம் உருவாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

99

இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா,  பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். தமிழில் ஹிட்டான இந்தப் படம், கன்னடத்தில்  '99' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 

99

ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார். இதில் த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் நடிகை பாவனா நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமலிருந்த பாவனா, இந்த திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றவுள்ளார்.

 

99

கன்னடத்துக்காக, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக '96'  ஜானு, அணிந்திருந்த மஞ்சள் வண்ண டிரெஸ் பெண்களை கவர்ந்த நிலையில், பாவனா இதில் கருப்பு மற்றும் பிரவுன் கலர் சுடிதார் அணிந்து நடித்துள்ளார். 

99

இந்நிலையில் கன்னட ரீமேக்கில் ராம் - ஜானுவாக நடித்துள்ள பாவனா மற்றும் கணேஷை விமர்சித்து ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

96

தமிழில் விஜய் சேதுபதியை ராமாகவும் , த்ரிஷாவை ஜானுவாகவும் கொண்டாடிய ரசிகர்கள் பாவனா - கணேஷை அந்த கதாபாத்திரத்தில் பொருத்தி பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

99

இதனால் தமிழில் கிடைத்த வெற்றி கன்னடத்திலும் கிடைக்குமா? ரசிகர்கள் இதை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதையும் வாசிக்க: தி.மு.க கூட்டணியினர் வீட்டில் பணத்தை வைக்கிறதும் போட்டுக்கொடுக்கிறதும் அ.தி.மு.க-தான்! வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!?

2018 TopTamilNews. All rights reserved.