பிரம்மிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய மைதானம்
அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியம் மோட்டேராவில் வரும் பிப்ரவரி 24 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பகல் / இரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தில் நான்கு டிரஸ்ஸிங் அறைகள் உள்ளமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்களும் உள்ளன. பிரதான மைதானத்தில் 11 சென்டர் பிட்சுகளைக் கொண்ட உலகின் ஒரே ஸ்டேடியம் இதுதான். மேலும் விளையாடும் ஆடுகளமும் பயிற்சி எடுக்கும் ஆடுகளமும் ஒரே மண்ணை கொண்ட உலகின் ஒரே மைதானம் இதுதான். கோபுர விளக்குகளுக்கு பதிலாக, எல்.ஈ.டி விளக்குகள் கூரையில் அமைக்கப்பட்டுள்ளதால் பார்க்க புது அனுபவமாக இருக்கும்.
மைதானத்தில் பலத்த மழை பெய்தால் தரை விரைவாக உலர அதிநவீன வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற வழக்கமான மைதானங்களுடன் ஒப்பிடுகையில் மழை நீரை மிக விரைவாக அகற்றமுடியும். ஒரு போட்டியின் போது 8 செ.மீ மழை பெய்தால் கூட, நீர் மிக வேகமாக வெளியேறும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்தாலும் போட்டிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ .2 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் மைதானத்தின் பராமரிப்பிற்காக மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.