• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

தல அஜித்துக்காக ஒரு மாஸ் கதை இருக்கு: தல ஓகே சொன்னா போதும்; பிரபல இயக்குநர் ஓபன் டாக்!

ajith

சென்னை: நடிகர் அஜித்தும் நானும்  இணைந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம். என்னிடம் அவருக்கான ஒரு மாஸ் கதை உள்ளது என்று இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவர் இயக்கிய சர்கார் திரைப்படம்  கதை திருட்டு சர்ச்சைக்குள் சிக்கி சுமுக நிலையை அடைந்த நிலையில் வெற்றிகரமாகத் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. சர்காரை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க ஏ ஆர்.முருகதாஸ் திட்டம் தீட்டி வருகிறார்.

armurugadoss

இருப்பினும் ஏ.ஆர். முருகதாஸுக்கு அஜித்தை வைத்து இயக்கிய தீனா திரைப்படம் தான் முருகதாஸ் மற்றும் அஜித் என இருவருக்குமே  திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து அஜித்தை வைத்து தீனா திரைப்படத்திற்குப் பின்னர் வேறு எந்தப் படத்தையும் அவர்  இயக்கவில்லை. அதே நேரத்தில் நடிகர் விஜய்-யை வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களை இயக்கிவிட்டார் முருகதாஸ். அதனால் மீண்டும் அஜித்-முருகதாஸ் கூட்டணி எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ajith

இந்நிலையில் இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ள ஏ.ஆர் முருகதாஸ்,  'கடந்த 7 ஆண்டுகளாக ரசிகர்கள் என்னிடம் எப்போது அஜித்துடன் படம் பண்ண போகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். சொல்லப்போனால் நானும் அதனை அஜித்திடம் சொல்லியுள்ளேன். ரசிகர்களின் விருப்பத்திற்காவது நாங்கள் இருவரும் இணைந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம். என்னிடம் அவருக்கான ஒரு மாஸ் கதை உள்ளது. அவரது அழைப்பிற்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.