• October
    17
    Thursday

Main Area

Main



பாஜகவில் இணைந்த விஜய் பட நாயகி: என்ன பதவி தெரியுமா?

isha
isha

மும்பை: பிரபல நடிகை இஷா கோபிகர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழில், அகத்தியன் இயக்கிய காதல் கவிதை, அரவிந்த் சாமி நடித்த, என் சுவாசக் காற்றே, விஜயகாந்தின் நரசிம்மா, விஜய்-யின் நெஞ்சினிலே உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை இஷா கோபிகர். இவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

isha

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இஷா கோபிகர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

isha

இதுதொடர்பாக, இஷா கோபிகர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘நாட்டுக்கு சேவை செய்ய ஆவலாக உள்ளேன். பாஜகவில் எனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் பெண்களுக்கான போக்குவரத்து அணியின் செயல் தலைவராக இஷா கோபிகர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.