• June
    25
    Tuesday

Main Area

Main



‘தளபதி 63’ படக்குழுவில் இணைந்த அடுத்த பிரபலம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

thalapathy
thalapathy
Loading...

சென்னை: அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் கதிர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 21-ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவற்றை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கும் நடிகர் கதிர், ‘தளபதி 63’ படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.