• April
    25
    Thursday

Main Area

Main



பெங்களுர் சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் விதி மீறல் புகார்

prakashraj
prakashraj
Loading...

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக தீவிர அரசியல் பேசி வருகிறார். பேசுவது மட்டுமில்லாமல் தேர்தல் களத்திலும் இறங்க முடிவெடுத்திருக்கிறார்.

தேர்தலில் சுயேட்சையாகப் போட்டி 

இந்த தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக பிரகாஷ்ராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.  சில நாட்களுக்கு முன்பு "இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன். மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன்." என்று ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார். இப்போது அவர் மத்திய பெங்களூரு தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க இருப்பதாக முடிவாகியிருக்கிறது.

prakas raj

இன்று பிரகாஷ்ராஜ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதிமீறல் புகார் 

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது . தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி டி மூர்த்தி புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அது விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

prakash raj

 இது அரசியல் சாராத பொதுக்கூட்டம் ஆகும். அதன் பெயரிலேயே இதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. அதனால் இதில் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என்கிறார் தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி. இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் விரைவில் விசாரிக்கும் என்று தெரிகிறது.


 

2018 TopTamilNews. All rights reserved.