• March
    24
    Sunday

Main Area

Main



ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார் வடிவேலு: என்னவானது ரெட் கார்டு?

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு
Loading...

சென்னை: திரைத்துறையில் சில காலமாகத் தலைகாட்டாமல் இருந்த வடிவேலு  தற்போது புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு எலி  படத்தில் நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம். 

vadivelu

இது நடந்த போது செட் வாடகை கோடியை தொட்டிருந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஷங்கர் வடிவேலு மீது புகார் கொடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, சங்கத்தினரோ அப்போது தான் விபரீதம் புரிந்து வடிவேலு மீது ரெட் கார்டு போட முடிவுக்கு வந்ததுள்ளனர். இதனால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். இன்றுவரை தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரம். 

vadivelu pei mama ttn

இந்நிலையில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்குப் பேய் மாமா  என்று தலைப்பு வைத்துள்ளனர். முன்னதாக ஷக்தி சிதம்பரம் இயக்கிய இங்லீஷ்காரன், கோவை பிரதர்ஸ் படங்களில் நடித்திருந்த  வடிவேலுவின்  காமெடி ரசிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.