• March
    22
    Friday

Main Area

Main



அனிஷா ரெட்டியை காதலிக்கிறேன்: மௌனம் கலைத்த நடிகர் விஷால்

vishal
vishal
Loading...


சென்னை: அனிஷா ரெட்டி என்பவரைக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால்  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று அறிவித்திருந்தார்.

vishal

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். அதன் படி நடிகர் சங்க கட்டட பணிகள்  மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முடியும் என்று கூறப்படுகிறது.  இதனிடையே விஷால்  ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியானது.

anisha

இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும்  விஷால்,  'எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற இருப்பது உண்மைதான். இது காதல் திருமணம்தான். ஒரு நிகழ்ச்சியில் அனிஷா ரெட்டியை சந்தித்தேன். அப்போதிலிருந்தே இருவரும் காதலர்களாகிவிட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் திருமணம். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்' என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.