• February
    18
    Monday

Main Area

Main

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அதிதிபாலன்!

aditi balan
aditi balan
Loading...

சென்னை: நடிகை அதிதிபாலன் தான் மலையாள படத்தில் நடிக்கவில்லை என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டில் வெளியான பல திரைப்படங்களில் ஒரு முக்கிய பங்கு வாய்த்த படம் என்றால் அது அருவி என்றே சொல்லலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அதில்  கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் ஏற்கனவே நடிகர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால்' உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்துத்திருந்தார்.பின்பு பல இயக்குநர்கள் இவரை தேடி சென்று கதை கூறிய போதிலும், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதையில் தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் சந்தோஷ் சிவன் இயக்கும் மலையாளம் படத்தில் அதிதிபாலன் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மறுத்த அதிதிபாலன், இந்த படத்தில் நடிக்க தன்னிடம் யாரும் அணுகவில்லை என்று விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.மேலும்  இதில் மஞ்சுவாரியர், காளிதாஸ் ஜெயராமன், நெடுமுடிவேணு உள்பட் பலர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.