#BREAKING: காவல்துறைக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைது!

 

#BREAKING: காவல்துறைக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைது!

பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவதூறாக பேசி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் நடிகை மீரா மிதுன் மற்றும் அண்மையில் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி தனது ஆண் நண்பருடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த சமூகத்தினர் அப்படித்தான் செய்வார்கள், அவர்களை சினிமா துறையில் இருந்து நீக்க வேண்டும் என சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியிருந்தார்.

#BREAKING: காவல்துறைக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைது!

அந்த வீடியோ வைரலான நிலையில் மீரா மிதுனை கைது செய்ய வேண்டுமென காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத மீரா மிதுன் தன்னை கைது செய்ய யாராலும் முடியாது. கனவில் தான் அந்த நடக்கும் என காவல்துறைக்கே சவால் விடும் விதமாக பேசி மற்றொரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை மத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை கைது செய்துள்ளனர். சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.