• May
    26
    Sunday

Main Area

Main



விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கணவர்! 

vinothini
vinothini
Loading...

பிரபல நடிகை விநோதினியின் கணவர் விபத்தில் சிக்கியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழில் வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தில் நாயகியாக களமிறங்கி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளில் கொடிக்கட்டி பறந்த விநோதினியின் கணவர் வெங்கட் ஸ்ரீதர் கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கிறார். நேற்று இரவு திருவான்மியூரிலிருந்து மெரினா நோக்கி இருசக்கர வாகனத்தில் ஸ்ரீதர் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பாட்ஷா என்பவரின் வாகனம் மீது ஸ்ரீதர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் வயிறு மற்றும் இடுப்பில் காயமடைந்த ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அடையாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.