• March
    24
    Sunday

Main Area

Main



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: போலீஸ் அவங்க வேலையா ஒழுங்கா பண்ணா போதும்! கொந்தளிக்கும் அதிதி பாலன்!

அதிதி பாலன்
அதிதி பாலன்
Loading...

சென்னை: பொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை அதிதி பாலன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

pollachi

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் தொடங்கி, திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அருவி படத்தின் மூலம் பிரபலமான அதிதி பாலன் கருத்து பதிவு செய்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்,' போலீஸ் ஏன் அந்த பெண் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்காமல்? சம்மந்தப்பட்டவர்க்கு போன் செய்து பாதுகாப்பாக இருக்க சொல்றாங்க? ரொம்ப கேவலமான விஷியமா இருக்கு என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.