• April
    24
    Wednesday

Main Area

Main



மோடியை பார்த்து ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்; மம்தா பானர்ஜி தாக்கு!

மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
Loading...

கொல்கத்தா: பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பார்த்தால் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது.

நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அந்த மாநிலங்களில் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

pmmodi

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சுதந்திரத்துக்கு முன்னர், காங்கிரஸ் தலைவர்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாக்கப்பட்டிருக்காது. ஜம்மு - காஷ்மீரில் தேசதுரோகம் பாதுகாப்பு படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் (AFSPA) சட்டப்பிரிவு மாற்றியமைக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதி பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் தலைவர் ராகுலை சாடிய பிரதமர் மோடி, சவுக்கிதாரை (காவலாளி) கண்டால் திருடர்களுக்கு பயம் தான் என்றார்.

hitler

இதனிடையே, மேற்குவங்க மாநிலம் ராய்கஞ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறை, கலவரங்கள் மற்றும் வெகுஜென கொலைகள் மூலம் அரசியலில் ஞானம் பெற்றவர் பிரதமர் மோடி. பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடைய ஃபாசிஸ்டுகளின் அரசர் அவர். ஒருவேளை ஹிட்லர் தற்போது உயிரோடு இருந்திருந்தால், மோடியின் நடவடிக்கைகளை பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றார்.

இதையும் வாசிங்க

பிஎம் நரேந்திர மோடி பட வழக்கு தள்ளுபடி; டிரெய்லரை கூட பார்க்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி

2018 TopTamilNews. All rights reserved.