• July
    16
    Tuesday

Main Area

Main



ஆபாச சிடிக்களை தூக்கி எறிந்த பெற்றோர்: நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு!

ஆபாச டிவிடி
ஆபாச டிவிடி
Loading...

அமெரிக்கா:  ஆபாச டிவிடி சேகரிப்புகளை அழித்த  பெற்றோர் மீது மகன் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தம்பதி,  தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இந்த திருமண வாழ்க்கையானது 10 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில், கருத்து வேறுபாட்டால் அவன் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். 

cd

ஆனால் இதை தொடர்ந்து பெற்றோருடனும் அடிக்கடி சண்டையிட்டு வந்த அவர், ஒருக்கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனியாக புதிய வீட்டிற்கு செல்லவும் திட்டமிட்டு தன்னுடைய பொருட்களையெல்லாம்  கொண்டு சென்றுள்ளார்.  புதிய வீட்டிற்கு சென்ற உடன் அங்கு அவர் கொண்டு வந்த பொருட்களில் 12 பெட்டிகளை காணவில்லை என்று கூறப்படுகிறது.

tik

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை அவர்கள் ஏற்கவில்லை. பின்னர் பெற்றோரை எதிர்த்து   நீதிமன்றத்தில்  வழக்கு  தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், 
29,000 டாலர் மதிப்புள்ள, அரிய வகையிலான ஆபாச டிவிடிகளை என் பெற்றோர் தூக்கி எறிந்து  விட்டனர். அதனால் என்  பெற்றோர் எனக்கு  86,000 டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

judge

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை, 'உன்னுடையை உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்காகவே நான் அவற்றை அழித்தேன். நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

உண்மையில் பாலியல் கல்வியை பெற்றோர்கள் தங்களது  சொல்லித்தர வேண்டும். அதில் ஒரு தெளிவு பிறக்காமல் இருக்கும் போதே அவர்களை திருமணத்தில் தள்ளிவிட்டு சங்கடத்திற்குள் உள்ளாகுவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது. 

இதையும் வாசிக்க: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; முழு விவரம்!

2018 TopTamilNews. All rights reserved.