• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

கிறிஸ்டியன் மைக்கேலுக்காக ஆஜரான வழக்கறிஞர் கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் தலைமை அதிரடி

aljo joseph

டெல்லி: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கின் முக்கி குற்றவாளியாக அறியப்படும் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். அப்படி, கொண்டு வரப்பட்ட அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அதையடுத்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விவகராம பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் இளைஞர் அணியில் இருந்த வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப், அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.
 

             
2018 TopTamilNews. All rights reserved.