• January
    22
    Tuesday

Main Area

Main

விஸ்வாசம் படத்தில் இரட்டை வேடம்?

Ajith in Viswasam
Loading...

ஹதராபாத்: ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் இரட்டை வேடம் ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு முன்பு அவர் அஜித்தை வைத்து இயக்கிய ‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ ஆகிய மூன்று படங்களிலும் அஜித்துக்கு சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் மட்டுமே வழங்கப்பட்டது. இது அஜித் ரசிகர்கள் பலருக்கு அதிருப்தியை தந்ததால், இந்தப் படத்தில் ப்ளாக் கலர் ஹேர் ஸ்டைலில் யூத்தான அஜித்தை காணலாம் என சிவா தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்புகளில் அஜித் சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஸ்வாசம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் இளமையான தோற்றம் பற்றி தெரியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் என்பதால், ‘விஸ்வாசம்’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

#Ajith #viswasam #siva #Ajithkumar #thala

2018 TopTamilNews. All rights reserved.