Main Area

Main

கமல் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்: அர்ப்ப சுகத்திற்காக சிலர் இப்படி செய்துள்ளனர்: அக்‌ஷரா ஹாசன் வேதனை!

akshara

மும்பை: நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து  ஷமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார். அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@mumbaipolice @cybercrime_cell

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan) on

சமீபத்தில் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமல் ஹாசன் அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்தப் புகைப்படம் பரப்பப்பட்டுள்ளதாக ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

 

'இந்தப் புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டு  வருகிறேன். இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்' என்று  அக்‌ஷரா ஹாசன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன், 'அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருக்கிறேன். இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.