• June
    27
    Thursday

Main Area

Main



இந்தப் பிறவியில் செய்த பாவம் எல்லாம் தீரணும்னா...இந்த தீர்த்தத்தில் நீராடினால் போதும்... பாடல்பெற்ற தலங்கள் வரிசை-13,திருக்குருகாவூர்

திருக்குருகாவூர்
திருக்குருகாவூர்
Loading...

சீர்காழியில் இருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 6 கி.மீ சென்றால்,வடகால் என்கிற கிராமம் வரும்.அங்கிருந்து தெற்கே ஒரு கிமீ தொலைவில் இருக்கிறது திருக்குருகாவூர் வெள்ளடை.

temple

உப்பனாற்றின் வடகரையில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் அமைந்திருக்கிறது.ஒற்றைப் பிரகாரம்.கிழக்கி நோக்கி அமைந்திருக்கும் சந்நிதியில் மூலவர் சுயம்புலிங்காமான வெள்ளடை நாதர் வீற்றிருக்கிறார். அம்மை காவியங்கன்னி.கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. 

சீர்காழியில் இருந்து சுந்தரர் தன் பக்த்தர்கள் சூழ இத்தலத்துக்கு வரும்பொழுது பசியும் தாகமும் வாட்ட அனைவரும் சோர்ந்து விடுகிறார்கள்.இதை கண்ட இறைவன் வழியில் ஒரு தண்ணீர்ப் பந்தல் உண்டாக்கி சாதாரண மனித உருவில் காத்திருக்கிறார்.சுந்தரரும் அவர் தொண்டர்களும் வந்ததும் அவர்களுக்கு தண்ணீரும் , கட்டுச்சோறும் தர அவர்கள் பசியாற உண்டு உறங்கிவிடுகிறார்கள்.விழித்துப் பார்த்தால் தண்ணீர் பந்தலைக் காணோம். அதனால்,வந்தது இறைவனே என்று அறிந்து இத்தலத்தில் வந்து வெள்ளடை நாதனை துதித்துப் பாடுகிறார்கள்.

அடுத்த கதையின் நாயகன் சம்பந்தர்.அவர் மதுரையில் சமணர்களை வாதில் வெல்கிறார்.தோற்ற சமணர்களை பாண்டியன் கழுவேற்றிக் கொல்கிறான்.
அந்த பாவத்தை போக்க கங்கைக்கு போக நினைத்த சம்பந்தருக்காக இறைவன் இந்தத் தலத்தில் உள்ள கிணற்றில் கங்கையை பொங்க வைக்கிறான்.சம்பந்தர் அந்தக் கிணற்றில் நீராடி பாப விமோசனம் பெறுகிறார். அந்தக் கிணறு கோவில் அருகிலேயே தனி பிரகாரத்தில் இருக்கிறது. அது ஆண்டு முழுவதும் பூட்டி வைக்கப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று அந்த பூட்டுத் திறக்கப்பட்டு அந்த கிணற்றில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப் படுவர்.அன்றைய தினத்தில்,கிணற்று நீர் வெண்மை நிறத்தில் இருக்கும் என்றும்,அப்படி, தை அமாவாசை அன்று திருக்குருகாவூர் வந்து இந்தத் தீர்த்தத்தில் நீராடினால்,ஒருவர் இந்தப் பிறவியில் செய்த பாவம் எல்லாம் தீரும் என்றும் நம்பிக்கை. திருக்குருகாவூர் இராசாதிராச வளநாட்டுத் திருவாலிநாட்டு குருகாவூர் என்று கல்வெட்டுக்களில் சொல்லப்படும் இத்தலம் பாடல்பெற்ற தலங்கள் வரிசையில் 13.சுந்தரர்,சம்பந்தர் திருப்பதிகம் பெற்றது.

2018 TopTamilNews. All rights reserved.