• July
    22
    Monday

Main Area

Main



திரும்பவும் உங்களை சாரணர் தேர்தல்ல போட்டி போட வச்சிடுவாய்ங்க போலருக்கே எச்.ராஜா சார்

Ravindranatah trailing Theni
Ravindranatah trailing Theni
Loading...

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவரத்துவங்கி, இறுதி முடிவை ஓரளவுக்கு யூகிக்கும் அளவுக்கு மேககூட்டம் விலகி வழிவிடுகிறது.யாரெல்லாம் முன்னிலை பெற்றிருக்கிறார்கள் என்பதை எல்லா தொலைகாட்சி சேனல்களும் சொல்லி வருவதால், முக்கிய வேட்பாளர்களில் யாரெல்லாம் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரும்பாலான வெற்றி திமுக பக்கம் செல்லும் சூழல் உருவாகி உள்ளதால், அனைத்து அதிமுக கூட்டணி பிரபலங்களும், கோயம்புத்தூர் சி.பி.ராதாகிருஷ்ணனை தவிர்த்து, பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். சிவகங்கையில் ஹெச்.ராஜா முதலில் சாரணர் படை தேர்தலில் வென்றுவிட்டு பிறகு மக்களவை தேர்தலுக்கு வரவேண்டும் என்பதே சிவகங்கை வாக்காளர்களின் முடிவாக தெரிகிறது.

H Raja Trailing

தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வெற்றிகரமான தோல்வி காத்திருப்பதாக தகவல். கன்னியாகுமரியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலையும் பரிதாபம்தான்.

BJP Losing big in TN

அமமுக, நா.த.க. ம.நீ.ம. உள்ளிட்டவை கணக்கை ஆரம்ப்பிப்பதாக தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வெற்றி வேட்பாளராக தன்னை கருதி குச்சனூர் கோயிலில் கல்வெட்டு வைத்த ரவீந்திரநாத் மட்டும் முன்னிலையில் இருக்கிறார். 

2018 TopTamilNews. All rights reserved.