• April
    25
    Thursday

Main Area

Main



அ.ம.மு.க -வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கியப் பிரமுகர் ; தி.மு.க - வில் இணைகிறார்

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Loading...

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

முக்கியப் பிரமுகர் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வில் நடந்த கலவரங்களுக்கு பிறகு தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் கட்சி துவங்கினார் டி.டி.வி.தினகரன். ஏராளமான தொண்டர் படையுடன் ஆர்.கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 

வி.பி கலையரசன்

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி. கலைராஜன். இவர் கட்சியில் அதிக செல்வாக்கு உள்ள நபர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இந்த நிலையில் இவர் திடீர் என்று அ.ம.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வி.பி. கலைராஜனை நீக்குவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது.

திமுக - வில் இணைகிறார் 

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வி.பி. கலைராஜன் நீக்கி வைக்கப்படுகிறார்.

டிடிவி தினகரன்

அவர் கட்சியின் மாண்பிற்கு களங்கம் விளைவித்துவிட்டார். கட்சியின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் இனி தொடர்பு கொள்ள கூடாது, என்று டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

வி.பி.கலைராஜன் வகித்து வந்த பொறுப்புக்கு வி. சுகுமார் பாபு நியமிக்கப்படுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்தது, இதையடுத்துதான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள். இந்நிலையில், இன்று திருச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணையவிருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.