×

 #BREAKING: 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. பொன்னியின் செல்வன் சிறந்த தமிழ்படமாக தேர்வு.. 

 

டெல்லியில்  70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  

2022ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளை ராகுல் ராவில் அறிவித்து வருகிறார்.  இதில் தமிழில் சிறந்த திரைப்படமாக  மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.  பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சன்பிக்சர்ஸ்  தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  


 
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு அறிவிப்பு..

சிறந்த கன்னட திரைப்படமாக யஷ் நடிப்பில் வெளியான  கே.ஜி.எப் 2 படத்திற்கு அறிவிப்பு

சிறந்த மலையாள திரைப்படத்திற்கான விருது  சவுதி வெள்ளைக்கா படத்திற்கு அறிவிப்பு.. 

சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு..  

சிறந்த நடிகைக்கான விருது  திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கும்,  கட்ச் எக்ஸ்பிரஸ் என்னும் குஜராத்தி படத்தில் நடித்த மானசி பரேக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது 2 பேர் பகிர்ந்துகொள்கின்றனர்.  

சிறந்த நடிகருக்கான விருது காந்தாரா படத்தில் நடித்ததற்காக நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு அறிவிப்பு.. 

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிப்பு

சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடன இயக்குனர்கள் ஜானி மாஸ்டர் - சதீஷ் ஆகியோருக்கு அறிவிப்பு.. 

 சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருது  காந்தாரா திரைப்படத்திற்காக் அன்பறிவுக்கு அறிவிப்பு..  

 

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா தேர்வு