×

நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு..  

 

சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க சாலை  பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர்.  கடந்த 2022ம் ஆண்டு  இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஐஃபோன், லேப்டாம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது  வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார். 

அதற்கு முன்பாக சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்தபோது தன்னை துன்புறுத்தியதாகவும்,  அபாண்டமாக திருட்டுப்பட்டம் கட்டி  தான் தங்கியிருந்த அறையில் வைத்து தாக்கியதாகவும் தன்னை நடிகை பார்வதி நாயர், அயலான் பட தயாரிப்பாளர் உள்ளிட்ட 7 பேர்  மீது  புகார் அளித்திருந்தார். பின்னர் தனது புகார் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததும்  நடவடிக்கை எடுக்கவில்லை என  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  உடனடியாக தவறான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என  சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும்  நேற்று முன்தினம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  அதன்படி நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.