#Justin : ரஜினியின் ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைக்கா நிறுவனம்..
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, ஃபகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார்.
இதனிடையே ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் வேட்டையன் படம் திரைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைனை தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமா வெளியிட்டுள்ளது.