×

பள்ளி மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்! வேலூரில் பரபரப்பு

 

பள்ளி மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாடு வியாபாரி. இவருடைய 13 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 16ஆந் தேதி 7.30 மணியளவில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர் மறைவு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைக்கட்டு தாலுகா தாங்கல் கிராமத்தை சேர்ந்த  வீரப்பன் (28),  இளமதன் (28),  சின்னராசு (30) ஆகியோர்  மது அருந்தி கொண்டிருந்ததாகவும், மதுபோதையில் இருந்த 3 பேரும் சிறுமியை மடக்கி பிடித்து வாயை பொத்தி சிறிது தூரம் தூக்கி சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் சிறுமியை மிரட்டி மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே இயற்கை உபாதைக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தந்தை கையில் டார்ச் லைட்டுடன் தேடிச் சென்றுள்ளார். சிறிது தூரத்தில் மகளின் அலறல் சத்தம் கேட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு மகள் அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து வீரப்பன், இளமதன், சின்னராசு ஆகியோர் தப்பி ஓடினர். 3 பேரையும் அவர் விரட்டி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் தப்பியோடி விட்டனர்.

தனது மகளை  அங்கு நடந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி உடனடியாக அவளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மகளின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது அதனால் மனவேதனை அடைந்த தொழிலாளி நேற்று முன்தினம் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்க சென்றார். எல்லை பிரச்சினையால் அவரிடம் புகார் பெறாமல் பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் போலீசார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீரப்பன் உள்பட 3 பேரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று சிறுமி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார் அதன்பேரில் ஆய்வாளர் காஞ்சனா விசாரணை நடத்தி வீரப்பன், மதன், சின்னராசு ஆகியோர் மீது வழக்குப்பதிந்து 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மூன்று பேர் மீதும் போசோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 13 வயது பள்ளி சிறுமியை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.