அப்பாவும், அண்ணானும் சேர்த்து பலாத்காரம் செய்துவிட்டனர்- 13 வயது சிறுமி கதறல்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெற்ற தந்தை மற்றும் அண்ணன் முறை கொண்டவரால் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜான்சிராணி (28). இவருக்கும் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்னர், திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என முன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்துவாழ்ந்து வரும் மனைவி ஜான்சி மேரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இரண்டாவது மகளான 13 வயது சிறுமியை தந்தையின் பொறுப்பில் விட்டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை தாயை சந்திக்க வீட்டிற்கு வந்த சிறுமியை தந்தை பின் தொடர்ந்து வந்து சிறுமியின் தாயிடம் சண்டையிட்டதாக தெரியவருகிறது.
சிறுமி தனது தந்தையும், தனது பெரியப்பாவின் மகனானஅண்ணன் முறை கொண்ட இருவரால் தமக்கு நேர்ந்த கொடுமையை முதல் முறையாக வாய்விட்டு கதறி அழுது கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் பெண் ஆய்வாளர் வரலட்சுமி புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஜான்சி மேரி கூறுகையில், கடந்த திங்கட்கிழமை காலையில் திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்ததாகவும், ஆனால் புகாரை ஏற்று கொள்ள மகளிர் போலீசார் மறுத்து பின்னர் ஆய்வாளர் இல்லை என கூறி அனுப்பி வைத்ததாகவும், தொடர்ந்து தான் காவல் நிலையம் செல்லும் போதெல்லாம் ஆய்வாளர் உள்ளே இருந்தாலூம் இல்லை என கூறியதாகவும் சிறுமியின் தந்தையும் அண்ணனும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள் அதனால் மன்னித்து விடு என சமரசம் செய்தநிலையில் அதை தாம் ஏற்று கொள்ளாதபோது புகார் எழுத பேப்பரை கேட்ட நிலையில் அதை தூக்கி வீசியதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.