×

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் கைது

 

செய்யாறு அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு மாத கர்ப்பம் ஆக்கிய வழக்கில் 62 வயதான முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெரணமல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்டு வந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த தனியார் வேன் ஓட்டுனராக பணி புரியும் 62 வயதுடைய நாகராஜ் என்ற முதியவர், அதே கிராமத்தைச் சார்ந்த 13 வயது சிறுமி அவருடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்லேட் வழங்கி ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் சிறுமி உடல் உபாதையால் அவதிப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 

இதனை அடுத்து சிறுமியை விசாரணை செய்ததில் அவர் வீட்டின் அருகாமையில் உள்ள நாகராஜ் என்ற முதியவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 62 வயதான ஓட்டுநர் நாகராஜ் என்பவரை கைது செய்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் 62 வயதான முதியவர் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி இரண்டு மாத கர்ப்பமான ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.