×

கல்லூரி காதலனுடன் சேர்ந்து கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துகொன்ற மனைவி

 

திருமணத்திற்கு பின்னரும் கல்லூரி காதலனுடன் ரகசிய உறவில் இருந்து வந்திருக்கிறார் அந்த பெண்.   கணவருக்கு இது தெரிந்து கண்டித்ததும் காதலனுடன் சேர்ந்து கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறார் மனைவி.   தர்மபுரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 தர்மபுரி மாவட்டத்தில் நரசிபுரம் சுடுகாட்டில்  வாலிபர் ஒருவர் பாதி எரிந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி அன்று சடலமாக மீட்கப்பட்டார்.   கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததில்,   அவர் பாப்பாரப்பட்டி அடுத்த இண்டூர் சோமம்பட்டியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் மணி   என்பது தெரிய வந்திருக்கிறது   இவர்  ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.   அவருக்கு திருமணம்  ஆகி அம்சவள்ளி(24) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 இதை அடுத்து மணியின் கொலைக்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது அவரின் மனைவி அம்சவள்ளி முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார்.   இதில் போலீசாருக்கு அவர் மேல் சந்தேகம் வந்திருக்கிறது.  அவரிடம் துருவித் துருவி போலீசார் விசாரணை நடத்தியதில்,  கல்லூரி காதலனுடன் சேர்ந்து கணவரை எரித்துக் கொண்டதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

 மாங்கரைப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(வயது27) என்ற வாலிபருக்கும் அம்சவள்ளிக்கும் கல்லூரி காலத்தில் இருந்து காதல் இருந்து வந்திருக்கிறது .  ஆனால் பெற்றோர் திடீரென்று மணிக்கு அம்சவள்ளியை திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.   இதில் பெற்றோரின் பேச்சை மீற முடியாமல் இருந்திருக்கிறார்  அம்சவள்ளி. பெயருக்குத்தான் மணியை திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பின்னரும் காதலன் சந்தோஷுடன் ரகசிய உறவில் இருந்து வந்திருக்கிறார்.

 இது மணிக்கு தெரிய வந்திருக்கிறது.   அவர் உடனே மனைவியை கண்டித்து இருக்கிறார்.   இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி காதலனிடம் சொல்லி எப்படியாது கணவனை கொன்று விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.   அதன்படி அவர்கள் போட்ட திட்டத்தின் படி கணவர் மணியை மது குடித்து சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லி பணம் கொடுத்து இருக்கிறார் அம்சவள்ளி.

 மணியும் பணத்தை வாங்கிச் சென்று மதுகுடுத்தி போதையில் இருந்திருக்கிறார்.    போதையில் இருந்தவரை அம்சவள்ளியின் காதலன் சந்தோஷும் அவரின் நண்பர் லோகேஷும் பைக்கில் ஏற்றி சென்றிருக்கிறார்கள்.    நரசிபுரம் சுடுகாட்டுக்கு  அவரை கொண்டு சென்று கை, கால்களை கட்டி போட்டு விட்டு பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்கள். 

 மணி உடல் எறிய ஆரம்பித்ததும்  அவர்கள் தப்பித்து வந்து விட்டார்கள்.    நடந்த சம்பவம் குறித்து முழுவதுமாக அறிந்த பின்னர் அம்சவள்ளி, அவரது காதலன் சந்தோஷ்  அவருக்கு உடந்தையாக இருந்த லோகேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.