×

திருமணம் செய்துவைக்க சொல்லிய மகனை கொன்ற தாய்

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அடிக்கடி குடிபோதையில்  ரகளையில்  ஈடுபட்ட பெற்ற மகன் மீது கொதிக்கும் எண்ணெய்யை  ஊற்றி கல்லால் அடித்து கொலை செய்த தாய் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு தாயிடம்  எனக்கு  திருமணம் செய்து வைக்கு மாறு ரகளையில் ஈடுபட்டு வந்ததாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ் அதிகளவில் குடித்துவிட்டு அவரது தாய் ருக்குமணி மற்றும் முனியம்மாளிடம் மீண்டும்  எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ரகளை செய்து உள்ளார். இந்த நிலையில் அடிக்கடி குடித்து விட்டு தாயிடம்  ரகளையில்  ஈடுபட்ட காரணமாக ருக்குமணி மற்றும் அவரது சகோதரி முனியம்மாள் ஆகியோர் நள்ளிரவில்  கொதிக்கும் எண்ணெய்யை சுரேஷின் மீது ஊற்றி அருகே இருந்த கல்லைக் கொண்டு சுரேஷின் தலையில் போட்டு கொலை செய்துள்ளனர். 

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுரேஷ் பலியானார். இதையடுத்து தகவல் அறிந்த வந்தவாசி காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  வந்தவாசி போலீசார்  தாய் ருக்குமணி மற்றும் அவரது சகோதரி முனியம்மாள் ஆகியோர்களை வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் தாயிடம் அடிக்கடி  குடி போதையில்  எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு  ரகளையில் செய்தார். மேலும் தாய்  மற்றும் தாயின் சகோதரியிடம் பல்வேறு இன்னல்களை செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய்  மற்றும் சகோதரி நள்ளிரவில்  கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததாக ஒப்பு கொண்டனர். பின்னர் போலீசார் இரண்டு நபர்களையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.