×

வீடு புகுந்து திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்த கந்துவட்டிக்காரர்

 

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, வட்டி வசூலிக்க சென்றவர் வட்டி வசூலிக்க சென்ற வீட்டில் கணவன் வெளியே சென்றிருந்த நிலையில், தனியே இருந்த 24 வயது திருமணமான பெண்ணை  பாலியல் சொந்தரவு செய்த கந்துவட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடை அடுத்துள்ள  ஆம்பலாப்பட்டு தெற்கு, பரங்கிவெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத். கூலி தொழிலாளியான இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பாப்பாநாடு பகுதியை சேர்ந்த 48 வயது செந்தில்குமார், என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு பெற்று இருந்தார். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக வட்டி பணத்தை வினோத் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில்  செந்தில்குமார்  வினோத் வீட்டிற்கு  வட்டிப்பணம் வசூலிக்க  சென்றவர்  வினோத் வீட்டில் இல்லாதபோது  அவரது மனைவி  24 வயது ஜூலியர்வளர்மதி, மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது, செந்தில்குமார் வட்டி பணத்தை கேட்டு சென்றவரிடம்   அப்போது, ஜூலியர் வளர்மதி, தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் தான் உள்ளது. மீதி பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறேன் எனக் கூறி  5 ஆயிரம் ரூபாயை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார்   பணத்தை பெற்றுக்கொண்ட  செந்தில்குமார், ஜூலியர் வளர்மதியிடம் பாலியல் ரீதியாக நடந்துக்கொள்ள முயன்றுள்ளார். மேலும், வட்டி பணம் 5 ஆயிரம் ரூபாயில், 2,500 ரூபாயை செலவுக்கு வைத்துக்கொள் என ஜூலியர் வளர்மதியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.  ஆனால், செந்தில்குமார் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த ஜூலியர் வளர்மதி அழுதுக்கொண்டு இருந்தார். பிறகு, வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரிடம், நடந்த சம்பவம்  குறித்து ஜூலியர் வளர்மதி கூறி அழுதுள்ளார். 

இது தொடர்பாக பாப்பாநாடு போலீசில்  வினோத்தும்    ஜூலியர் வளர்மதியும்  இன்று  புகார் அளித்தனர். இது தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு  அழைத்துசென்ற போலீசார்  விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவம் உறுதியானது. இதையடுத்து செந்தில்குமார் மீது கந்துவட்டி, பெண்ணை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.