×

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை

 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ராஜாதோப்பு பகுதியில் நீலாவதி என்ற பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கரியாபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும் நீலாவதி(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விஜயகுமார்- நீலாவதியிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு நீலாவதி கடந்த 6 மாத காலமாக மணமேல்குடி அருகே உள்ள ராஜா தோப்பு பகுதியில் தனது 8 வயது மகள் கணிசினியுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் மற்றும் மணமேல்குடியை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் அடிக்கடி நீலாவதி வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் வீட்டிலிருந்த நீலாவதியை காணவில்லையென சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்கு சென்று பார்க்கையில் நீலாவதி கழுத்தில் சேலை சுற்றியபடி இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல்த்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.