மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை! பகீர் பின்ணனி
வேப்பூர் அருகே பாசார் கிராமத்தில் குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திக்கொண்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு முத்துசாமி என்ற மகன் உள்ளார். முத்துசாமிக்கு இரண்டு மனைவிகள் 4 பிள்ளைகள் உள்ளனர். முத்துசாமிக்கும் அவரது தந்தை ஆறுமுகத்திற்கும் அடிக்கடி தகராறு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு தந்தை மகன் இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து ஆறுமுகம் கோபித்துக் கொண்டு ஒரு கை பையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் . அப்பொழுது முத்துசாமி கோபித்துக் கொண்டு சென்ற தந்தையை தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ஆறுமுகம் கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் முத்துசாமியை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த முத்துசாமியை அப்பகுதியினர் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துசாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வேப்பூர் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.