×

ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரி சார்பில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்!

 

ஈரோட்டில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் நந்தா பிசியோ தெரபி கல்லூரி சார்பில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின், ஈரோடு மாவட்ட கிளை, நந்தா பிசியோ தெரபி கல்லூரி மற்றும் ரெட் ரிப்பன் கிளப் அமைப்புகளின் சார்பில் ஈரோட்டில் இன்று ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நந்தா பிசியோதெரபி கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த முகாமில், செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் டி.ஜி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர்  மணிவண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநில துணைத் தலைவர் தாமஸ் வி.ஜான் சிறப்புரை ஆற்றினார். பெருந்துறை துணை மாவட்டத் தலைவர் பல்லவி பரமசிவன், மாவட்ட துணைத் தலைவர் மு. ரவி வாழ்த்துரை வழங்கினார்.  ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஹேமா பிரியா ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றினார். இந்த விழிப்புணர்பு முகாமில் நந்தா பிசியோ தெரபி கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக பேராசிரியை சித்ராதேவி நன்றியுரை கூறினார்.