×

தருமபுரி அருகே லாரி மோதி அரசுப்பள்ளி ஆசிரியர் பலி!

தருமபுரி தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுாி மாவட்டம் ஏ.செக்காரப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் முத்துராஜ். இவர் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முத்துராஜ் இன்று காலை வழக்கம்போல், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். இண்டூா் கடைவீதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று, முத்துராஜின் வாகனத்தின்
 

தருமபுரி

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுாி மாவட்டம் ஏ.செக்காரப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் முத்துராஜ். இவர் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முத்துராஜ் இன்று காலை வழக்கம்போல், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். இண்டூா் கடைவீதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று, முத்துராஜின் வாகனத்தின் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்த முத்துராஜ் மீது லாரியின் பின்புற சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த இண்டூர் போலீசார், ஆசிரியர் முத்துராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.