×

தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய கலைஞர்கள் நூதன போராட்டம்!

தருமபுரி தமிழக அரசு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமிய கலைஞர்கள் நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளராக, கிராமிய கலைஞரான சோமசுந்தரம் என்பவரை நியமனம் செய்தது. இவரது நியமனத்திற்கு நடக கலைஞர்கள் மத்தயில் பெரியளவில் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு திடீரென சோமசுந்தரத்தை நீக்கிவிட்டு, கிராமிய
 

தருமபுரி

தமிழக அரசு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமிய கலைஞர்கள் நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளராக, கிராமிய கலைஞரான சோமசுந்தரம் என்பவரை நியமனம் செய்தது. இவரது நியமனத்திற்கு நடக கலைஞர்கள் மத்தயில் பெரியளவில் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு திடீரென சோமசுந்தரத்தை நீக்கிவிட்டு, கிராமிய கலைஞர் அல்லாத ராமசாமி என்ற திரைப்பட நடிகரை உறுப்பினர் செயலாளராக நியமித்து உத்தரவிட்டு உள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை கிராமிய கலைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தருமபுரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாடக கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து பம்பை அடித்தும், வாத்தியக் கருவிகளை இசைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, முனைவர் சோமசுந்தரம், கிராமிய கலைஞர்களிடம் நன்கு பழக கூடியவர் என்றும், அவர்களது சுக – துக்கங்களில் பங்கெடுத்து, கலைஞர்களின் தேவைகளையும் எதிர்பர்ப்புகளை நன்கு அறிந்தவர் என்றும் கூறினர். எனவே, மீண்டும் சோமசுந்தரத்தை உறுப்பினர் செயலராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.