×

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை… டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் சஸ்பெண்ட்!

தருமபுரி அரூர் அருகே மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், டாஸ்மாக் நிறுவன சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின்போது, கடையின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் காசிநாதன், அரசின் உத்தரவை மீறி மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும்,
 

தருமபுரி

அரூர் அருகே மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், டாஸ்மாக் நிறுவன சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின்போது, கடையின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் காசிநாதன், அரசின் உத்தரவை மீறி மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், கடையில் போதிய அளவு விற்பனையாளர்கள் பணியமர்த்தியுள்ள சூழலில், மற்றொரு கடையின் விற்பனையாளரான பாஸ்கர் என்பவரை விற்பனை பணியில் ஈடுபடுத்தி, கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சிக்களூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் காசிநாதன் மற்றும் விற்பனையாளர் பாஸ்கர் ஆகியோர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், அவ்வாறு விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன், டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த, அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள பார்களை திறந்து மதுஅருந்த அனுமதிப்பதோ, திண்பண்டங்களை விற்பனை செய்வதோ கூடாது என்றும், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபான விற்பனை செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார்.