×

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… தப்பியோடிய கணவருக்கு போலீஸ் வலை!

தருமபுரி தருமபுரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்தவர் குருசிவா. கூலி தொழிலாளி. இவரது மனைவி வைத்தீஸ்வரி (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வைத்திஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக
 

தருமபுரி

தருமபுரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்தவர் குருசிவா. கூலி தொழிலாளி. இவரது மனைவி வைத்தீஸ்வரி (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வைத்திஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வைத்தீஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த வைத்திஸ்வரின் உறவினர்கள் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், கணவரை கைதுசெய்யவும் கோரி கிருஷ்ணகிரி – திண்டிவனம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர். தொடர்ந்து, வைத்திஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணவர் குருசிவாவை தீவிரமாக தேடி வருகன்றனர்.