×

அரூர் அருகே பால் குடித்தபோது புரையேறியதில் இளம்பெண் பலி!

தருமபுரி தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பால் குடித்தபோது புரையேறியதில் புதுமணப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வீரப்பநாயக்கன்பட்டி, அண்ணா நகரை சேர்ந்தவர்கள் முனுசாமி – லட்சுமி தம்பதியினர். இவர்களது மூத்த மகள் நித்தியா (19). இவருக்கு கைலாயபுரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் சத்திய மூர்த்தி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் வசித்து வந்த நித்தியா, நேற்று முன்தினம் மாலை
 

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பால் குடித்தபோது புரையேறியதில் புதுமணப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வீரப்பநாயக்கன்பட்டி, அண்ணா நகரை சேர்ந்தவர்கள் முனுசாமி – லட்சுமி தம்பதியினர். இவர்களது மூத்த மகள் நித்தியா (19). இவருக்கு கைலாயபுரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் சத்திய மூர்த்தி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் வசித்து வந்த நித்தியா, நேற்று முன்தினம் மாலை வீட்டில் பால் குடித்துள்ளார். அப்போது, திடீரென புரையேறியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நித்யாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நித்தியாவை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அரூர் போலீசார், நித்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம்குறித்து நித்யாவின் தந்தை முனுசாமி அளித்த புகாரின் பேரில்,போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் இறந்ததால் இந்த சம்பவம் குறித்த வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.