×

செல்போன் டவர் அமைத்து தர கோரி, மலைக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

தருமபுரி அரூர் தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களில் செல்போன் டவர் அமைத்து தரக்கோரி, 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தேரி மலைப் பகுதியில் வள்ளி மதுரை, வாழைத்தோட்டம், தாதரவலசை, தோல் தூக்கி ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த, மலைக் கிராமங்களில் செல்போன் டவர் சரிவர கிடைக்காததாக கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ,
 

தருமபுரி

அரூர் தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களில் செல்போன் டவர் அமைத்து தரக்கோரி, 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தேரி மலைப் பகுதியில் வள்ளி மதுரை, வாழைத்தோட்டம், தாதரவலசை, தோல் தூக்கி ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த, மலைக் கிராமங்களில் செல்போன் டவர் சரிவர கிடைக்காததாக கூறப்படுகிறது.

இதனால், இந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் தாதரவலசையில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். மேலும், டவர் பிரச்சினையால் மருத்துவம், ஆம்புலன்ஸ உள்ளிட்ட பிற சேவைகளுக்கும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று வள்ளி மதுரை, வாழைத்தோட்டம், தாதரவலசை உள்ளிட்ட 4 மலைக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

மேலும்,செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் உத்திரவாதம் அளித்தால் மட்டுமே, தாங்கள் வாக்களிப்போம் என்று, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர்.