×

மீன் சாப்பிடுறதுல இவ்வளவு விஷயம் இருக்கா…?

ஞாயிற்றுக்கிழமை.. பல பேர் வீட்டு கிச்சன்ல ஆடும், கோழியுமா கொதிச்சுக்கிட்டு இருக்கு… ஆனா மீன்பிடி தடைக்காலம் எல்லாம் இல்லாத இந்த நாட்கள்ல மீன் உணவை நாம் சரியாக உண்பதில்லை. ஞாயிற்றுக்கிழமை.. பல பேர் வீட்டு கிச்சன்ல ஆடும், கோழியுமா கொதிச்சுக்கிட்டு இருக்கு… ஆனா மீன்பிடி தடைக்காலம் எல்லாம் இல்லாத இந்த நாட்கள்ல மீன் உணவை நாம் சரியாக உண்பதில்லை. மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுதுன்னு பார்க்கலாம். அசைவ உணவில் எப்பொழுதுமே கடல் உணவுகளுக்கு தான் அதிக
 

ஞாயிற்றுக்கிழமை.. பல பேர் வீட்டு கிச்சன்ல ஆடும், கோழியுமா கொதிச்சுக்கிட்டு இருக்கு… ஆனா மீன்பிடி தடைக்காலம் எல்லாம் இல்லாத இந்த நாட்கள்ல மீன் உணவை நாம் சரியாக உண்பதில்லை.

ஞாயிற்றுக்கிழமை.. பல பேர் வீட்டு கிச்சன்ல ஆடும், கோழியுமா கொதிச்சுக்கிட்டு இருக்கு… ஆனா மீன்பிடி தடைக்காலம் எல்லாம் இல்லாத இந்த நாட்கள்ல மீன் உணவை நாம் சரியாக உண்பதில்லை. மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுதுன்னு பார்க்கலாம்.
அசைவ உணவில் எப்பொழுதுமே கடல் உணவுகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இன்று நகரங்களில் விற்கிற ஆட்டிறைச்சிகளிலும், கோழி இறைச்சிகளிலும் ஒரு சத்துக்களுமே கிடையாது என்பது தான் முகத்தில் அறைகிற நிஜம்.

பெரும்பாலான இறைச்சி கடைகளில் நாம் வாங்கும் ஆட்டிறைச்சி, செம்மறி ஆட்டினுடையது தான். அதில் சத்துக்கள் எல்லாம் கிடையாது. பிராய்லர் கோழிகளின் இறைச்சியை உண்பதால், அதன் வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் புரோட்டீன் பவுடர்களும், வளர்ச்சி ஊக்க மருந்துகளும் நம் திசுக்களையும், ஹார்மோன்களையும் வேகமாக முதிர்ச்சியடைய செய்கின்றன.
 நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் காய்கறிகள், பழங்கள் , மீன் உணவுகள் சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை நாம் நமது உண்வில் சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம் சிறுபிள்ளைகள முதல் பெரியோர்கள் எல்லோரும் மீன் சாப்பிடலாம்.

மீன், நல்ல உணவாவதோடு நோய்களுக்கு, குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறையாவது மீன் உட்பட கடல் உணவுகளை சேர்த்துக் கொண்டால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது. வஞ்சிரம், சுறா என்று இல்லாமல் ஒட்டி மீன், சீலா மீன், விளாமீன், நெத்திலிமீன், சூவாப்பாரை, பாரை இப்படி எல்லா மீன்களிலுமே நிறைய சத்துக்கள் இருக்கின்றன.

பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்கு அங்கு பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவை குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லை. எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள் தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகின்றது. மீன் உணவுகள் விட்டமின் சத்துக்கள் நிறைந்தவை. பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும்.
மீன்களில் அதிகளவில் இருக்கும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும், கால்சியம் வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சரும நோய் வராமல் தடுக்கிறது. முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. 

மீன்களில் இருக்கும் ஒமேகா3 கொலஸ்ட்ராலை குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்து கொள்கிறது. ரத்தம் சீராக பாயவும் உதவி செய்கிறது.  மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் போன்றவைகள் உடலுக்கு நன்மை அளிக்கும்.
என்றைக்காவது ஆசைக்கு உங்களுக்குப் பிடிச்சதை சாப்பிடலாம். மற்றபடி, அசைவம் என்றால் சிக்கன், மட்டன் என்று வயிற்றை நிறைக்காமல், ஆரோக்கியமான உணவாக கடல் உணவைத் தேர்ந்தெடுங்கள். எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு மீன் உணவு