×

காணாமல்போன சிறுவன் உயிரிழந்த பரிதாபம்... வெள்ள நீரில் மிதந்தபடி சடலம் மீட்பு

 

வெள்ளத்தில் சிக்கி இறந்த 14 வயது சிறுவன் உடல் இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும் அவலம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.


ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் பெய்த கனமழை வெள்ளத்தில் இருந்து சகஜ நிலைக்கு சிறிது சிறிதாக மீண்டு வருக்கூடிய நிலையில் பல இடங்களில் சோக காட்சிகள் கண்கலை கலங்க செய்கிறது. ஒருபுறம் அரசு  நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், சில இடங்களில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இந்நிலையில் சித்தா நகரில் இரண்டு நாள் முன்பு காணாமல் போன 14 வயது சிறுவன் வெள்ளத்தில் இறந்த நிலையில் இன்று சடலம் கிடைத்தது. இதனை இடுப்பளவு தண்ணீரில் தாய் கதறி அழுது கொண்டு பின்னால் செல்லும் நிலையில்  சடலம் கொண்டு செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.