கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது . கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் அதிக தொகுதிகள் கொண்ட மாநிலங்கள் வரிசையில் எட்டாவது இடத்தில் கர்நாடகா இடம்பெற்றுள்ளது. இங்கு இருமுனைப் போட்டி நிலவுகிறது. பாஜக இம்முறை மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் நாளை(ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் நாளை மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.